|
Monday, April 27, 2009
INFO Stroke - "S T R"
Tuesday, April 21, 2009
ஈராக்- IRAQ
-சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் தகவல்(26.04.06)
“பாக்தாத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் 14 வாலிபர்களின் இறந்த உடல்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. அந்த 14 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் ‘ஒமார்’ என்ற பிரத்தியேகமாக சுன்னி முஸ்லிம்களுக்கேயுரிய பெயரைக் கொண்டவர்கள். அச்சமடைந்த உறவினர்கள் பிணங்களைப் பொறுப்பெடுக்க வரவில்லை. அவை தெரு நாய்களுக்கு உணவாகின.”- (04.08.06)
“யூலை, ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் மட்டும் 7000 சுன்னி அல்லது ஷியா முஸ்லிம்கள் இறந்துள்ளனர். இரு தரப்பிலும் 3 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். நாளொன்றிற்கு 3000 பேராவது அகதிகளாகப் பிற நாடுகளுக்கு ஓடியுள்ளனர்”
- ஐ. நா. சபையின் விசேட அறிக்கை
இவ்வளவு நடந்தும் புஷ் நிர்வாகம் ஈராக்கில் உள்நாட்டுப் போர் அல்லது வகுப்புவாதக் கலவரம் நடப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஷியா முஸ்லிம்களைப் பெரும்தொகையாகக் கொல்லும் குண்டு வெடிப்புகள் எல்லாம் சில வெறிபிடித்த பயங்கரவாதிகளின் செயல் (சுன்னி முஸ்லிம் மக்களை) படுகொலை செய்யும் அரசு சார்ந்தகொலைகாரக் கும்பல் யாவும் இனம் தெரியாதவர்கள்.
இவ்வாறுதான் சர்வதேச செய்தி ஊடகங்கள் எமக்குத் தெரிவித்து வந்தன. உலக மக்களும் அப்படியே நம்ப வைக்கப்பட்டனர். அதேநேரம், ஈராக் பொது மக்கள், ‘அமெரிக்க ஆட்சியைவிட சதாமின் ஆட்சி மேல்’என்று கூறுமளவிற்கு அங்கே நிலைமை மோசமடைந்துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து சுன்னி-ஷியா என்ற இரு முஸ்லிம் பிரிவுகள் மார்க்க அடிப்படையில் பிரிந்திருந்தபோதும் இரு சமூக மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதில்லை. சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த சதாம் {ஹசைனின் ஆட்சியில் ஷியா முஸ்லிம்கள் அடக்கப்பட்டதாக மேற்கத்தைய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான செய்திகளைக் கூறி வந்தன. உண்மையில் சதாம் தனக்கு எதிரான அரசியல் சக்திகளாக இனம் கண்ட ஷியா மதத் தலைவர்களையே கைது செய்து சிறையிலடைத்தார்.
சாதர் குழு அல்லது மஹதி குழு போன்ற ஆயுதமேந்திய ஈரான் ஆயத்துல்லாக்கள் வழியில் நடக்கும் மத அடிப்படைவாத இயக்கங்கள். முழு ஷியாக்களினதும் ஆதரவைப்பெற்றிருக்கவில்லை. இவர்களின் சதாம் அரசுக்கெதிரான சில தாக்குதல்கள் பலமுறை தோல்வியடைந்த போதிலும் சந்தேகத்தின் பேரில் பல ஷியா மக்கள் கைது செய்யப்பட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஷியாக்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதான ஆதங்கம் அந்த மக்களுக்கு இருந்தபோதும், அதற்காக ஒரு போதும் அவர்கள் ஆதிக்கப்பிரிவான சுன்னி முஸ்லிம்களை வெறுக்கவில்லை. ஈரான் - ஈராக் யுத்தத்தின்போதுகூட ஷியா மக்கள் சதாம் அரசுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள். ஈரானியர்களும் ஷியாக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் தமது தாய்நாட்டைக்காட்டிக் கொடுக்கவில்லை.
1990ம் ஆண்டு இடம்பெற்ற குவைத் மீதான ஆக்கிரமிப்பும் அதைத் தொடர்ந்த வளைகுடாப் போரும் ஈராக்கின் எதிர்காலத்தைத் தீர்மானித்தது. போரால் தோற்ற ஈராக்மீது ஐ. நா. சபை நாடுகள் (அமெரிக்க அழுத்தத்தால்) பொருளாதாரத் தடை விதித்தன. வடக்கு ஈராக்கில் குர்திய பிரதேசத்தின்மீதும், தெற்கு ஈராக்கில் ஷியா பிரதேசத்தின்மீதும் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டதால் சதாமின் அரசு மத்திய ஈராக்கினுள் முடக்கி வைக்கப்பட்டது. சில ஆண்டுகளின்பின் பொருளாதாரத் தடை காரணமாக ஈராக் மக்கள் பட்டினி கிடந்து சாவதாக சர்வதேசக் கண்டனங்கள் எழுந்ததால் ஐ. நா. சபை ‘எண்ணைக்குப் பதிலாக உணவு’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்படி ஈராக் அரசு சர்வதேசச் சந்தையில் தான் விற்கும் எண்ணையின் பெறுமதிக்குச் சமமான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதைக்கூட ஈராக் அரசு தான் விரும்பியபடி செய்ய முடியாது. எந்தெந்த உணவுப் பொருட்களை, எங்கே வாங்க வேண்டும் அதை ஈராக்கிற்கு எப்படிக் கொண்டு போவது, யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போன்றவற்றை ஐ.நா சபையே தீர்மானித்தது. அதிலும் பல ஐ. நா. அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் (தலைவர் கோபி அனானின் மகன் உட்பட) முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியவை வேறு கதை.
இந்த எண்ணை - உணவுப்பொருள் பண்டமாற்று நியாயமாக நடத்தப்படவும் இல்லை; அதன் பலனெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரவும் இல்லை. குறிப்பாக,ஈராக்கின் மொத்த சனத்தொகையில் 13வீதமேயுள்ள குர்திய மக்களுக்கு மொத்த வர்த்தகத்தின் 43வீத வருமானம் போய்ச் சேர்ந்தது. குர்தியப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரு ஆயுதமேந்திய இயக்கங்கள் சட்டவிரோதமாக எண்ணை கடத்தி விற்றுக் கிடைத்த வருமானம் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஐ. நா. தயவில் சுயதாதீனமாக இயங்கக்கூடிய நிலையில் (இன்றுவரை எவராலும் அங்கீகரிக்கப்படாத) ‘குர்திஸ்தான்’ என்ற தனிநாடே உருவாகிவிட்டது. எண்ணை கடத்தலால் அங்கே பெற்ற வருமானம் யப்பானில் இருந்து இறக்குமதி செய்த எலக்ட்ரோனிக் பொருட்கள் சொகுசு வாகனங்கள் என்று செலவு செய்யப்பட்டு பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஈராக்கின் பிறபகுதிகளில் வாழ்ந்த அரபு மக்கள் சாப்பாடு தேடி அலைந்து கொண்டிருந்தனர்.
தெற்கு ஈராக் ஷியா மக்கள் வான்வெளிக் கண்காணிப்புக்குள் அடங்கியதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டபோதும் அவர்களும் பட்டினிச்சாவில் இருந்து தப்பவில்லை. புஷ் நிர்வாகம் ஈராக் மீதான படையெடுப்பை ஆரம்பித்தபோது சி. ஐ. ஏ. யும் அமெரிக்க இராணுவமும் குர்திய ஆயுதக் குழுக்களின் உதவியோடு முன்னேறின. அரபு மக்களையும் குர்திய மக்களையும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நிரந்தரமாகப் பிரித்துவிட்டன. அரபுக்கள் குர்தியரை ஏகாதிபத்தியத்தின் அடியாட்களாகப் பார்த்தனர். குர்திய ஆயுதக் குழுக்களுக்கு இஸ்ரேல் இராணுவப் பயிற்சி அளித்ததாக வந்த தகவல்கள் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுள்ள ஈராக்கின் புதிய இராணுவத்திலும் பொலிஸிலும் கணிசமான அளவு குர்தியர்கள் பணி புரிகின்றனர்.
அமெரிக்க இராணுவம் ஈராக் முழுவதையும் பிடித்த பின்பு செய்த முதல் வேலை சதாம் ஆட்சியின் கீழ் பணி புரிந்த அனைத்து இராணுவ வீரர்களையும் வீட்டிற்கு அனுப்பியதுதான். அந்தப் பழைய இராணுவத்தில் பெருமளவு சதாம் விசுவாசிகளும் பாத் ஆதரவாளர்களும் சுன்னி முஸ்லிம்களும் அங்கம் வகித்தமை உண்மைதான். இருப்பினும் இராணுவத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத வீரர்கள் தொழிலிழந்தவர்களாய்த் தமது குடும்பத்தைக் காப்பாற்றும் வழி தெரியாது திண்டாடினர். இந்த அவலங்களை எள்ளளவும் கவனத்திற்கெடுக்காத அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் சதாம் புதிதாக உருவாக்கிய ஈராக்இராணுவத்தில் ஷியா முஸ்லிம்களைப் பெருமளவில் சேர்த்தனர். நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்து வேலையற்றோர் எண்ணிக்கை 80வீதமாக இருந்த காலத்தில் இராணுவ-பொலிஸ் வேலைகளுக்காக ஷியா இளைஞர்கள் முண்டியடித்ததில் வியப்பில்லை.
ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ‘பாத்’ கட்சியினரும் வேலையிழந்த இராணுவ வீரர்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சிக் குழுக்களை அமைத்தனர். இந்தக் குழுக்கள் தேசியவாத அடிப்படையைக் கொண்டிருந்த போதிலும் அவற்றின் உறுப்பினர்கள் சுன்னி முஸ்லிம்பிரிவில் இருந்தே வந்தனர். புதிதாக உருவாக்கப்படும் இராணுவமும் பொலிசும், நாளை தம்மை அடக்க ஏவிவிடப்படும் அரச இயந்திரங்களாக மாறும் என்ற நியாயமான அச்சம் காரணமாக பாதுகாப்புப் படைகளில் வேலை தேடிச் சென்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை கிளர்ச்சிக்காரர்கள் குண்டு வைத்துக் கொன்றனர். துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு கொல்லப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஷியா முஸ்லிம்கள் என்பதால், வகுப்புவாதப் பிரிவினை அப்பொழுதே வேர் விடத் தொடங்கியது. பல தசாப்தங்களாக இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு அதிகாரமற்றிருந்த ஷியாக்களைப் பொறுத்தவரை தற்போது கிடைத்துள்ளது ஒரு பொன்னான வாய்ப்பு. புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் இராணுவம் பொலிஸ் ஆகிய அதிகார அமைப்புகளில் தமது பிரதிநிதித்துவத்தை ஸ்திரப் படுத்துவதன்மூலம் ஷியா முஸ்லிம்கள் ஈராக்கின் ஆளும் பரம்பரையாக விரும்பின. பொம்மைகளைக் கொலு வைப்பதைப்போல ஈராக்கியரைத் தன்னிஷ்டப்படி ஆட்டிப் படைத்த அமெரிக்காவும் ஷியா முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது.
இதனால் ஷியா மத அடிப்படைவாத சக்திகள் புத்துயிர் பெற்றன. “ஈராக்கில் இஸ்லாமிய புரட்சிக்கான தலைமைக்குழு என்ற கட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் பொறுப்பில் உள்துறை அமைச்சு உள்ளதும் பாதுகாப்புப் படைகள் அந்த அமைச்சின் கீழ் வருவதும் இங்கே சுட்டிக் காட்டப்படவேண்டும். மேற் குறிப்பிட்ட மதஅடிப்படைவாதக் கட்சியின் தொண்டர்கள் பொலிஸ்காரர்களாகவும் இராணுவவீரர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். ‘மஹதி இராணுவம்’என்ற இன்னொரு ஷியா ஆயுதக்குழு ஈராக் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அமைத்து தனிக்காட்டு ராஜாக்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. அந்தப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் மஹதி இராணுவத்தின் ஆயுதங்களைக் களையவும் அமெரிக்க இராணுவம் பல தடவை முயற்சி செய்தபோதும் தோல்வியுற்று, இறுதியில் சமரசமாகப் போனது. மஹதி இராணுவ வீரர்கள் பலரை தேசிய இராணுவத்திலும் பொலிஸ் படையிலும் இணைத்ததன் மூலம் அந்தச் சமரசம் எட்டப்பட்டது.
மேலே குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள் யாவும், ஒரு பக்கத்தில் அமெரிக்கா ஈராக்கில் புதிய ஆளும் வர்க்கத்தை நிலைநாட்ட உதவியபோதும், மறுபக்கத்தில் சுன்னி- ஷியா முஸ்லிம் பிரிவுகளுக்கிடையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கி அவர்களை எதிரிகளாக்கிவிட்டது. இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக்கும் கைங்கரியத்தை ஆற்ற எங்கிருந்தோ வந்தார்கள் சர்காவி தலைமையிலான அல்கைதா குழுவினர். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை தமது சண்டைப் பயிற்சிக்குப் புதிய களம் கிடைத்ததாகக் கருதிய அல்கைதாவினர் சுன்னி முஸ்லிம்களைத் தம் பக்கம் கவர்ந்தனர். அல்கைதா சவுதி அரேபியாவின் வஹபி என்ற இஸ்லாமியக் கடும் போக்காளரின் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருப்பதால் ஷியா முஸ்லிம்கள் ஆதரவளிக்கவில்லை. வஹபிஸ்ட்டுக்களைப் பொறுத்தவரை, சியாக்கள் முஸ்லிம்கள் அல்லர். ஆகவே, ‘ஷியா என்ற போலி முஸ்லிம்கள்’ மீது வெறுப்புக் கொண்ட ஈராக்கிய அல்கைதா (அல்லது மக்கள் பார்வையில் வஹபிஸ்டுக்கள்) ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலங்களைத் தாக்குவதன்மூலம் தமது மதவாத அதிகாரத்தை சுன்னி முஸ்லிம்கள் மத்தியில்நிலைநிறுத்த விரும்பியது. ஷியா ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அப்பாவி ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்தது. அவர்களது தொலைநோக்கற்ற குறுகிய மதவாதம் தற்காலிகமாகச் சில சுன்னி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இப்படியான செயல்கள் தமக்குத் தீமையே அன்றி நன்மையைத் தரா எனப் புரிந்து கொண்ட ஈராக்கிய சுன்னி முஸ்லிம் மக்கள் அல்கைதாவை ஒதுக்க ஆரம்பித்தனர். ஆனால் அப்போது காலம் கடந்துவிட்டது.
ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் இஸ்லாமியவாதிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நாடளாவிய அமைப்பாக ஒழுங்குபடுத்தக்கூடிய பலமான தலைவர் இல்லாமல் இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் ஸர்காவியின் வரவுக்குப் பின் உற்சாகமடைந்தன. இருப்பினும் ஸர்காவியின் குறுகிய மதவாத அரசியல் அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் பிழையான சித்தாந்தம் என்பதைப் புரிந்து கொண்ட போராளிகளும் ஆதரவாளர்களும் மெல்ல விலகிக் கொண்டனர். ஒரு சில இடங்களில் நிலப்பிரபுக்களால் ஆதரிக்கப்பட்ட, ஈராக் அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்ட பிரதேசவாதக் குழுக்கள் அல்கைதாவை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தனர்.
அல்கைதா ஆதரவாளர்கள் தற்போது ஈராக் எல்லையோரம் இருந்த அன்பர் மாகாணத்தை மட்டும் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர். அமெரிக்க இராணுவம் இருந்த மாகாணத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
இன்றுள்ள ஈராக் அரசியல் நிலவரத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். வடக்கே குர்திஸ்தான் பிரதேசத்தில் முன்பு ஒரு காலத்தில் ஒன்றோடொன்று எதிர்த்து சகோதர சண்டையிட்டுக் கொண்டிருந்த பர்சானி மற்றும் தலபானி தலைமையிலான இரு குர்திய இயக்கங்கள் தற்போது தமக்குள் உடன்பாடு கண்டு சமாதானமாகி உள்ளன. குர்திஸ்தான் (பிராந்திய) பாராளுமன்றத்தில் இரு கட்சிகளும் அங்கம் வகித்தன. இருப்பினும் அவ்விரு கட்சிகளினதும் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தெற்கே ஷியா முஸ்லிம் அரேபியர்கள் வாழும் பிரதேசத்தில் ளுஊஐசுஐ, மஹதி இராணுவம் ஆகிய இயக்கங்களும் தமக்கென சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆயுதமேந்திய உறுப்பினர்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆங்காங்கே காவலரண்கள் அமைத்து பொதுமக்களைச் சோதனையிடுகின்றனர். சில நேரம் ஒரே வீதியில் பொலிஸ் சோதனைச் சாவடியும், சில கிலோமீற்றர்கள் தள்ளி ஆயுதக்குழுக்களின் சோதனைச் சாவடியும் காணப்படுவதால் மக்கள் யாருக்குத் தப்புவது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். முழுக்க முழுக்க ஷியா முஸ்லிம்களையே உறுப்பினர்களாகக் கொண்ட அதேநேரம், அப்பாவி ஷியா பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆயுதமேந்திய இயக்கங்கள் கடுமையான இஸ்லாமிய மதச் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இத்தகைய மத அடிப்படைவாத அரசியல் சக்திகளின் ஆதரவு தமக்கு அவசியம் என்ப தால் அமெரிக்க - பிரிட்டிஷ் படைகள் இவற்றைக் கண்டு கொள்ளாமல் மறு பக்கம் பார்த்துக்கொண்டு போகின்றன.
தலைநகர் பாக்தாத்தைக் கொண்டிருக்கும் மத்திய ஈராக்கைச் சேர்ந்த சுன்னி முஸ்லிம் அராபியர்கள் வாழும் எழுச்சி மிக்க பூமி. அங்கே யாரும் தமது கட்டுப் பாட்டில் இருப்பதாக அறிவிக்க முடியாது. ஃபலூஜா போன்ற வீரகாவியம் படைத்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, களத்தில் நிற்கும் பாத் தலைமையிலான தேசியவாதக் குழுக்களுக்கும் பிற இஸ்லாமியவாதக் குழுக்களுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருந்தபோதிலும் சகோதரச் சண்டை இதுவரை இல்லை. அமெரிக்கா இதுவரை வெளியே சொல்லாவிட்டாலும் பாக்தாத் நகரம் மட்டும் தான் ஈராக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமைச்சு அலுவலகங்கள், பிற அதிகாரமையங்கள் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ராஜதந்திரிகளின் வாசஸ்தலங்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கட்டளைத் தலைமையகம், ஊடகவியலாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள், இவற்றுடன் மேற்படி நிறுவனங்களில் தொழில் புரியும் பணியாளர்களின் குடும்பங்கள் எல்லாமே உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்குகின்றன. இந்த உயர்பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் கோட்டை மதில்களால் சூழப்பட்ட தனியான பிரதேசம். அதாவது பாக்தாத் நகரத்தினுள் இன்னொரு நகரம்.
நிச்சயமாக இந்த உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வசிப்பவர்களுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியாது. சர்வதேச ஊடகவியலாளர் உட்பட, இந்த வலயத்தில் மட்டுமே கிடைக்கும் ஆடம்பரங்களான 24 மணிநேர மின்சாரம், எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் இறக்குமதிப் பொருட்கள் என்பன வெளியில் வாழும் சாதாரண ஈராக்கிய மக்களுக்கு அரிதாகவே கிடைக்கின்றன.
இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலையால் மக்கள் தீவிரவாத இயக்கங்களை நோக்கி இலகுவில் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடி என்பன புதிய தீவிரவாதிகளை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதுவரை கூறப்பட்ட தகவல்களின்படி ஈராக்கில் அராஜகம் கோலோச்சுவது தெளிவாகும். அங்கே ஜனநாயக முறைப்படி தெரிவான அரசாங்கம் பேரளவில் தான் ஆட்சியில் உள்ளது. இந்த இலட்சணத்தில்தான் ஈராக் பிரச்சினைக்குத் தீர்வென்ன என்று கேட்டு அமெரிக்க ஜனாதிபதி ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். இதுபோன்ற எத்தனையோ ஆய்வுக்குழுக்கள் கடந்த காலத்தில் செய்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது மமதையால் தன்னிஷ்டப்படி நடந்து கொண்ட உலகின் அதிசக்தி வாய்ந்த நாட்டின் ஜனாதிபதி புஷ்ஷிற்கு காலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது. “சதாமைத் தூக்கிலிட்டோம்; ஜனநாயகத்தை மீட்டோம்” என்பது போன்ற வாய்ச் சவடால்கள் யாருக்கும் உதவவில்லை. சாதாரண ஈராக்கிய மக்களோ “எமக்கு பாதுகாப்பே முதல் முக்கியம். உயிர்போன பின்பு ஜனநாயகம் என்ன தேவைக்கு? ” என்று கேட்கிறார்கள்.
தற்போது படிப்படியாக தனது இராணுவத்தை விலத்திக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்தபோதும் ஈராக்கின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. அமெரிக்க இராணுவம் நாட்டை விட்டுப்போன உடனேயே ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் பாக்தாத்தில் இருக்கும் அதிகாரமற்ற பொம்மை அரசைக் கவிழ்த்துவிட்டு தமக்குள் சண்டையிட்டு ஆட்சியதிகாரத்திற்காக போட்டி போடுவார்கள். நிச்சயமாக பலமானதே வெல்லப்போகிறது. அதைவிட ஈராக் மூன்று துண்டாக உடையும் அபாயமும் உள்ளது. அப்படி உருவாகும் புதிய தேசங்கள் பிராந்திய வல்லரசுகளின் தயவிலேயே தங்கி இருக்க வேண்டி இருக்கும். குர்திஸ்தான் என்ற புதிய நாடு உருவாவதைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாது. துருக்கியிலும் தனிநாடு கோரும் குர்தியருக்கு இது உந்து சக்தியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, ஈராக்கின் சிறிய சிறுபான்மையினரான துருக்கி மொழி பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் அடிக்கடி தலையிடவேண்டி இருக்கும்
தெற்கு ஈராக்கில் ஏற்படப் போகும் ஷியா இஸ்லாமியக் குடியரசுக்கு ஈரான் பக்கபலமாக இருக்கும். ஷியா முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை அரபுலகில் விரிவு படுத்த தனக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தும். அதற்குப் பதிலடியாக சவுதிஅரேபியாவும் ஜோர்டானும் மத்திய ஈராக்கில் சுன்னி முஸ்லிம் அதிகாரத்தை நிலைநாட்டப் பாடுபடும். சவுதி அரேபியாவில் கணிசமான அளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்வதும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் எழுச்சிக்குத் தயாராவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்முறையாக வளைகுடாக் கடலின் சிறிய தீவான பாஹ்ரெயினில் ஷியாக்களின் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளமை ஆட்சியாளரை மகிழ்ச்சிப்படுத்தவில்லை.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அன்று தாம் செய்த பிரச்சாரத்தைத் தாமே நம்பியதன் பலனைத் தற்போது அனுபவிக்கின்றனர். சதாமின் சர்வாதிகாரத்தில் இருந்து தம்மை விடுதலை செய்ததன் நன்றியாக ஈராக்கிய மக்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்து விட்டது. அதனால் பின்னரும் தீவிரவாதக் குழுக்களுடன் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா குர்திய ஆயுதபாணிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அரேபியர்களை (சுன்னி - ஷியா முஸ்லிம்கள்) எதிர்த்துப் போரிட்டது. இரண்டாவதாக, ஷியா ஆயுதபாணிக் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு சுன்னி முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டது. கடைசியாக, சுன்னி முஸ்லிம் ஆதிக்கத்தில் இருக்கும் சில முன்னாள் பாத் கட்சித் தலைவர்களுடன் சில உடன்பாடுகளுக்கு வர உள்ளது. அரசியல் அதிகாரத்தை நிலை நாட்ட யாருடனும் கூட்டுச் சேரலாம். யாரோடும் எதிர்த்துப் போரிடலாம்.
ஈராக்கில் எதிர்காலத்தில் எந்த அரசியல் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச பொருளாதார சமூகத்தில் சேராமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அப்போது அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுதல் தவிர்க்க முடியாதது. பொருளாதார வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின் சதாமின் காலம் ஒரு பொற்காலம். தேசிய மயமாக்கப்பட்ட எண்ணை உற்பத்தியால் கிடைத்த வருமானம் அபிவிருத்திக்குச் செலவிடப் பயன்பட்டதால் தனிநபர் வருமானமும் அதிகரித்திருந்தது. அப்போது ஈராக் டினாரின் பெறுமதி அமெரிக்க டொலருக்குச் சமமாக இருந்தது. ஈராக்கின் சபிக்கப்பட்ட நாளைய தலைமுறை இவற்றையெல்லாம் பழங்கதைகளாக மறந்து போகலாம்.
பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை 2006 ம் ஆண்டு வெளிவந்த "உயிர்நிழல்" (ஒக்டோபர்-டிசம்பர் 2006) பிரசுரமாகியது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும், ஈராக்கின் நிலை அதிகளவு மாறவில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
Sunday, April 19, 2009
First Masjid in INDIA
பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.
ரியல்எஸ்டேட் விவகாரத்தில் வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தை (subprime mortgage programme) மூழ்கடித்து விட்டது, இந்தத் திட்டத்தில் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவின் பிரதான வங்கிகளில் சிலவும் முன்னனி நிதிநிறுவனங்களில் சிலவும் அழிவை சந்தித்துவிட்டன இன்னும் சில அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, கவர்ச்சிமிக்க சலுகைத்திட்டங்கள் மற்றும் பெரும்குவியலாக லாபம் கிடைக்கும் என்ற பகிரங்க அறிவிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு சர்வதேச வங்கிகளின் பணமும் நிதிச்சந்தை ஜாம்பவான்களாக விளங்கும் பல பன்னாட்டு நிதிநிறுவனங்களின் பணமும் அமெரிக்காவின் அடமானமுறை கடன் திட்டத்தை நோக்கி குவிந்தன, இந்த திட்டம் படுதோல்வி அடைந்து பல்லாயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதால் இதில் முதலீடு செய்த அமெரிக்க வங்கிகளும் நிதிநிறுவனங்கும் நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இந்த வங்கிகளும் நிதிநிறுவனங்கும் சர்வதேச அளவில் நிதியியல் தொடர்புகள் வைத்திருந்ததால் இதன் தீயவிளைவு முழு உலகத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா என்ற நோயாளி தும்மியதில் வெளிப்பட்ட நோய்க்கிருமி உலக முழுவதிலும் தொற்றிக்கொண்டு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் (subprime mortgage programme) ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவைப் பொறுத்வரை 300 பில்லியன் டாலர் என்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு 550 பில்லியன் டாலர் என்றும் நிதித்துறை அமைப்புகள் சில மதிப்பீடு செய்துள்ளன. இதனடிப்படையில் இந்த திட்டத்தால் பாதிப்பு அடைந்த நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகளின் அரசுகள் நிதிச்சந்தை குறித்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காகவும் நிதிநிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உயிரூட்டுவதற்காகவும் கோடிக்கணக்கான டாலர் பணத்தை ஒதிக்கியிருக்கின்றன, உண்மையாகக் கூறவேண்டுமானால் பிரிட்டன் அரசு செய்ததைப்போல சிலநாடுகள் தங்கள் நாட்டிலுள்ள சில பெரிய வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கûயில் இறங்கியிருக்கின்றன.
முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கருதப்படும் தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம் என்ற தாரகமந்திரம் தவிடுபொடியான கதையை நாம் கண்கூடாகக் காண்கிறோம், இவ்விரு கோஷங்களும் முதலாளித்துவவாதிகளின் அடிப்படை நம்பிக்கையாக விளங்கிவந்தன, நிதித்துறை நடவடிக்கைகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு நிதிச்சந்தையில் எத்தகைய கட்டுப்படுகளும் இருப்பதை தடைசெய்யும் சட்டத்தை டிசம்பர் 1999 ல் அமெரிக்கசெனட் கொண்டுவந்தது, முதலாளித்துவ கொள்கையை தலமையேற்று நடத்திச்செல்லும் அமெரிக்காவிலேயே இந்தத் தவறான கொள்கையின் தீயவிளைவு வெளிப்பட ஆரம்பித்தது, அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவை வினியோகம் செய்திருந்த பங்குப்பத்திரங்களை கொள்முதல் செய்துகொள்வதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசுக் கருவூலகத்தின் செயலாளர் (US secretary of govt. treasury) ஹென்ரி பால்ஸன் (Henry Paulson) கொண்டு வந்த திட்டத்திற்கு 700 பில்லியன் டாலர் பெய்லவுட் (bailout) தொகையாக ஒதுக்குவதற்கு அமெரிக்க செனட்டும் அமெரிக்க காங்கிரஸýம் அங்கீகாரம் அளித்ததின் மூலமாக நிதிச்சந்தையில் அமெரிக்கஅரசு தலையீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது, இத்திட்டம் அக்கீகரிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே கருவூலக செயலாளர் அதை நடைமுறைப் படுத்திவிட்டார், நிதித்துறையில் அரசு எந்தவிதமான தலையீடும் செய்யக்கூடாது என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை இப்போது மீறப்பட்டிருக்கிறது, இதன்மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் அதன் கொள்கைக்கு முரண்பாடாக செயல்பட்டிருக்கினறன, பொதுவுடமை கோட்பாட்டின் அடிப்பûயிலுள்ள கம்யூனிஸம் தோல்வியுற்று புதையுண்டு போன அதே முறையில் இப்போது முதலாளித்துவமும் மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன, ஐரோப்பாவின் பிரதான நாடுகளான பிரிட்டன். பிரான்ஸ். ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆய்வு செய்வதற்காக முறையான சந்திப்புகள் நடைபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன, அதுபோலவே G7 (ரஷ்யாவை இதில் சேர்த்துக்கொண்டால் G8 நாடுகள்) நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கிகளின் மேலாளர்களும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து விரிவான ஆய்வு நடத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றுமா?
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது என்பதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன அவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
1) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பிரட்டன் உட்ஸ் (Bretton woods) உடண் படிக்கையின் அடிப்படையில் நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கம் மட்டும் இருந்ததை மாற்றி அதற்கு இணையாக அமெரிக்க டாலர் கொண்டுவரப்பட்டது, 1970 க்குப் பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டில்(gold standard) தங்கத்தை அறவே நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அமெரிக்க டாலர் மட்டுமே ஏற்புநிறை மதிப்பீடாக கொண்டுவரப்பட்டது, இதன் மூலமாக அமெரிக்கநாட்டின் காகிதநாணயமான டாலர் தங்கத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் இயல்பாகவே உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏனெனில் பல்வேறு நாட்டு நாணயங்களும் செலாவணியில் (exchange) தங்கத்துடன் இணைக்கப்படாமல் அமெரிக்க டாலருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, ஐரோப்பாவின் யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்க டாலர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் இணைக்கப்பட்டிருபதால் தொடர்ந்து அதன் மதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.
எனவே நாணயங்ளுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(Gold standards) தங்கத்தை மறுபடியும் கொண்டு வந்தால் ஒழிய இத்தகைய பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும், இன்றைய சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கொண்டு வருகிறது, அமெரிக்க அரசின் சில கொள்கைகளால்(Policies) அமெரிக்க டாலரில் ஏற்படும் பாதிப்புகள் உலக நாடுகளின் நாணயங்களில் பிரதிபலிக்கிறது, உண்மையைக் கூறவேண்டுமானால் ஏகாதிபத்திய செல்வாக்கு பெற்றுள்ள எந்தவொரு நாட்டின் காகித நாணயமும் தங்கத்தின் மதிப்பு அதற்கு பின்னனியாக கொள்ளப்படா விட்டால் உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவது இயல்பான விஷயம்தான்.
2) வட்டி அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களால் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகள் தோன்றுகின்றன, காலஓட்டத்தில் கடன் கொடுக்கப்படும் தொகையின் மதிப்பு சிறிதுசிறிதாக குறைந்துகொண்டு வருகிறது என்றபோதிலும் தனிமனிதராக இருந்தாலும் சரி அல்லது ஒருநாட்டு அரசாக இருந்தாலும் சரி பலசமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, இதன்காரணமாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மேலும் மத்தியதர வகுப்பினர் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிதித்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தியிலும் பெரிய பாதிப்புகள் உருவாகின்றன.
3) இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பொருளாதார நடவடிக்கை. நிதிச்சந்தை. பங்குச்சந்தை. நிதியியல் உபகரணங்கள் (காசோலை (cheque) வரைவுகாசோலை (demand draft) ரொக்கப்பத்தரம் (cash certificate) போன்றவை) . வர்த்தகப் பொருட்கள். கொடுக்கல் வாங்கள்(business transaction) ஆகியவற்றில் யூகவர்த்தக முறை (speculative trading) பின்பற்றப்படுகிறது, இதனடிப்படையில் பொருட்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறது, இது முறையற்ற வர்த்தகம் என்பதோடு மிக ஆபத்தான பொருளாதார நடவடிக்கையாகவும் இருக்கிறது, பொருட்களின் விலையில் முறையற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுவதோடு பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இது காரணமாக இருக்கிறது, பொருளாதார சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு உடனடி காரணிகளாகவும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து மக்களை திசை திருப்பிவிடும் தவறான வர்த்தகமுறை (wrong commercial practice)) யாகவும் இருக்கிறது, லாபநஷ்டங்கள் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் குறைகளும் பாதிப்புகளும் சரியான முறையில் அறிந்து கொள்ளப்படாமல் இறுதியில் பெரும் நெருக்கடிகள் எற்பட்டு விடுகின்றன.
4) மிகமுக்கியமான விஷயம் என்னவென்றால் கிழக்கு நாட்டவராக இருந்தாலும் அல்லது மேற்கு நாட்டவராக இருந்தாலும் சொத்துரிமை தொடர்பான எதார்த்தமான உண்மைகள் பற்றிய அறிவை பெறாதவர்களாகவே இருக்கிறார்கள், பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து தோன்றிய கம்யூனிஸ சித்தாந்தம் (communist ideology)அனைத்து சொத்துக்களின் உரிமைகளையும் அரசுடமை ஆக்கியிருக்கிறது எனவே தனிமனிதர் எவரும் எத்தகைய சொத்துக்களையும் அடைந்துகொள்ள முடியாது, அதேவேளையில் முதலாளித்துவ சித்தாந்தம் (capitalist ideology) சொத்துரிமை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கியிருக்கிறது மேலும் தனிமனிதரின் சொத்துரிமையில் அரசு எந்தவிதமான தலையீடு செய்யாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த சித்தாந்தம் தாராள வர்த்தகக் கொள்கையை ஆதரிப்பதோடு உலகமயமாக்கல் என்ற கோஷத்தையும் எழுப்பிவருகிறது.
சொத்துரிமை பற்றிய முழுமையான அறியாமையின் காரணமாக அரசுகளிடம் காணப்படும் தவறான கொள்கைகள் பொருளாதாரத்தில் அதிர்வுகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துகின்றன, ஏனெனில் சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமை அரசிற்கு மட்டுமோ அல்லது தனிமனிதருக்கு மட்டுமோ உரியதல்ல மாறாக சொத்துரிமையில் மூன்று வகைகள் இருக்கின்றன.
பொதுச்சொத்து :
பூமியின் இயற்கை வளங்களான எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள். மின்சாரம் போன்ற ஆற்றல் வளங்கள். காடுகள் மற்றும் புல்வெளிகள் போன்ற பசுமை வளங்கள். ஆறுகள் மற்றும் கடல்கள் போன்ற நீர் வளங்கள் . பூமிக்குள் இருக்கும் புதையல்கள் ஆகியவை பொதுச்சொத்து இனங்களில் அடங்கும், இவைகளை அரசே நேரடியாக நிர்வாகம் செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை தன் செலவினங்களுக்கு எடுத்துக்கொண்டு மீதியுள்ள நான்கு பங்கை பொதுமக்கள் நலனுக்காக செலவு செய்யவேண்டும்.
அரசு சொத்து :
அரசினால் வசூலிக்கப்படும் அனைத்து விதமான வரிகளின் (ற்ஹஷ்ங்ள்) மூலம் கிடைக்கும் பணம். தனியார் சொத்து இனங்களில் அடங்காத விவசாயம். வர்த்தகம். கனரக தொழிற்சாலை. ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பணம். யுத்த கனீமத் பொருட்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம். இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம் ஆகியவை இதில் அடங்கும், இந்தப் பணம் முழுவதும் அரசு செலவினங்களுக்கும் பொதுமக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
தனியார் சொத்து :
தனிமனிதர்கள் தங்கள் உழைப்பு மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ அல்லது அன்பளிப்புகள் மூலமாகவோ அடைந்து கொள்ளும் அனைத்து சொத்துக்களும் இதில் அடங்கும், ஷரியாவின் விதிமுறைப்படி பொதுச் சொத்துக்களை தனியார் அடைந்து கொள்ள முடியாது அதுபோலவே தனியார் சொத்தையோ அல்லது பொதுச்சொத்தையோ அரசுசொத்தாக மாற்றமுடியாது.
இந்த மூன்று வகை சொத்துரிமைகளும் வெவ்வேறானவை அவை ஒவ்வொன்றும் ஷரியாவின் விதிமுறைப்படியே நிர்ணயிக்கப்படுகின்றன, கம்யூனிஸத்தில் உள்ளது போல் இவை மூன்றையும் ஏகபோகமாக அரசுடமை ஆக்கினாலும் அல்லது முதலாளித்துவத்தில் உள்ளது போல் மூன்றையும் ஏகபோகமாக தனியார்மயம் ஆக்கினாலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் நெருக்கடியும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும், அனைத்து வகையான சொத்துரிமைகளையும் அரசு எடுத்துக்கொண்டு தனிமனித உரிமைகளைப் பறித்ததால் கம்யூனிஸ பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது, சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ ஆட்சிக்காலத்தில் எண்ணெய் வளம். கனிம வளம். மற்றும் கனரக தொழிற்சாலை ஆகியவை அரசு நிர்வாகத்தில் இருந்ததால் அதன்மூலம் அதற்கு கணிசமான வெற்றி கிடைத்தது அதேவேளையில் தனியார் வசம் இருக்க வேண்டிய சிறுதொழில். விவசாயம். வர்த்தகம் ஆகியவற்றை அரசு தனக்கு உரிமையாக்கிக் கொண்டு நிர்வாகம் செய்ததால் பெரும் தோல்வி ஏற்பட்டு அந்த அரசு வீழ்ச்சியை சந்தித்தது, அதுபோலவே மேற்கத்திய நாட்டின் முதலாளித்துவ அரசுகளும் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன, முதலாளித்துவ நாடுகளில் பொதுச்சொத்துக்கள் தனியார்மயமாக ஆக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நலனுக்கு பயன்படவேண்டிய பூமியின் அரியவளங்கள் அனைத்தும் ஒரு சில தனிமனிதர்களிடத்தில் குவிந்து கிடக்கின்றன, கனரக தொழிற்சாலைகள். ஆயுத தொழிற்சாலைகள். ஆகியவை தனியாருக்கு சொந்தமாக ஆக்கப்பட்டதால் வர்த்தக சந்தையில் தலையீடு செய்வதிலிருந்து அரசு ஒதுக்கப்பட்டதோடு ஒரு அரசு நிலைத்திருப்பதற்கு உரிய வருவாய் ஆதாரங்களும் அரசின் இயல்பான உரிமைகளும் அதனிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன, தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம். அரசியல் தலையீடற்ற பொருளாதாரம். உலகமயமாக்கல் ஆகிய கோஷங்களின் பெயரால் இந்த அத்துமீறல்கள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றன, தவறான இந்த பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் முடிவுகள் தவிர்க்க முடியாததுõ தொடர்ச்சியான வீழ்ச்சி வேகமான அழிவுõ நிதிச்சந்தைகளும் நிதிநிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நொறுங்கிவிழும் துயரம். இவைதான் தவறான கொள்கை ஏற்படுத்திய இயல்பான முடிவு.
தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது. தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமேõ ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடைசெய்திருக்கிறது.
நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயம் ஆக்கியிருக்கிறது, காகித நாணயத்தை அச்சிடும் பட்சத்தில் அதற்கு ஈடான மதிப்பிற்கு தங்கத்தையும் வெள்ளியையும் அரசு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் விரும்பும்போது நாணயங்களை தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அரசு கருவூலகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு இருக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் கட்டாயமாக ஆக்கியிருக்கிறது, இதன்முடிவாக ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துடன் பிணைக்கப் படுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, இதனடிப்படையில் ஒரு நாட்டின் நாணயம் இதர நாட்டின் நாணயத்திலிருந்து சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் ஒவ்வொரு நாணயத்திற்கும் நிலையான மதிப்பு இருக்கவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
மேலும் வட்டியை அதன் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, தேவையுள்ளவர்களுக்கு எந்தவிதமான வட்டியோ அல்லது கட்டணமோ இல்லாமல் கடனுதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயமாக ஆக்கயிருக்கிறது, பைத்துல்மால் எனறழைக்கப்படும் அரசு கருவூலகம்(govt. treasury) தேவை உள்ளவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் வகையில் தனிகணக்கில் பணம் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
இதுபோலவே பொருட்களை கையிருப்பில் வைத்திருக்காத நிலையில் யூகத்தின் அடிப்படையில் விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, முறையற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்குப்பத்திரங்கள். நியியல் உபகர்ணங்கள் (செக்.டிரா*ப்ட் போன்றவை) ரொக்கப்த்திரங்கள் மற்றும் டிரைவேடிவ்ஸ்(அசலான மதிப்பு இல்லாத நிதியியல் உபகர்ணங்கள்) ஆகியவற்றில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, மேலும் சொத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனுமதித்துள்ள யூகவணிகம் Lm (speculative trading) போன்றவற்றை மேற்கொள்வதற்கும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுச்சொத்து இனங்களில் அடங்குகின்ற எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு போன்ற ஆற்றல் வளங்கள் போன்றவற்றை தனிமனிதர்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அரசுத்துறை நிறுவனங்களோ தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுமக்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை ஷரியா விதிமுறைகளின் அடிப்படையில் அரசு பராமரித்து வரவேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்கள் பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்யப்படவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது, இவ்வாறாக மனிதனின் வரம்புமீறிய சுயநலத்தினாலும் மனிதநேயத்திற்கு முரண்படும் பேராசைகளாலும் விளையும் அனைத்து பொருளாதார சீரழிவுகளையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருப்பதோடு அவற்றைக் குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறது, இஸ்லாம் என்ற இந்த கொள்கை பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் இறைவனிடமிருந்து வந்துள்ளது அவன் தனது படைப்புகளுக்கு நன்மையானவை எவை என்பதை நன்கு அறிந்தவன்.
(அனைத்தையும்) படைத்த அவன் அறியமாட்டானா? அவன் (தன் படைப்புகளிடத்தில்) மென்மையும் கனிவும் கொண்டவனாகவும் (அவற்றை) நன்கு உற்று நோக்குகிறவனாகவும் இருக்கிறான், ( 67 :14)
முஸ்லிம்களே!
தனது தூதர் முஹம்மது(ஸல்) மூலமாக இஸ்லாம் என்ற உயர்ந்த மார்க்கத்தை உங்களுக்கு வழங்கியிருப்பதால் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு ஒப்பற்ற கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்; மேலும் அவன் உங்களை எச்சரிக்கை செய்தும் இருக்கிறான், இஸ்லாத்தின் பொருட்டாகத்தான் அனைத்து சமுதாயத்திலும் சிறந்த சமுதாயமாக உங்களை உயர்த்தியிருக்கிறான், இந்த தீனை முழுமையாக செயல்படுத்துவதில்தான் உங்களுடைய கண்ணியமும் உயர்வும் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த உயர்வு உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல மாறாக அது முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தானது ஏனெனில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான கொள்கைகளையும். செயலாக்கஅமைப்புகளையும் (man made systems) பல நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்று இஸ்லாம் வெற்றி அடைந்திருக்கிறது.
சங்கைக்குரிய குர்ஆனை தடிப்பான அட்டைகளில் மூடி வைத்திருப்பதால் இந்த மகத்தான மார்க்கத்தை நடைமுறைப் படுத்திவிட முடியாது மாறாக இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் சத்திய செய்தியை உலகம் முழுவதற்கும் அழைப்புப்பணி (Daw'ah) மூலம் எடுத்துச்செல்லக்கூடிய கிலா*பாவை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் முன்மாதிரி அடிச்சுவட்டில் நிர்மாணிப்பதின் மூலமாகவே அதை செய்யமுடியும், மனித சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் செழிப்பிற்கும் கிலா*பா மட்டுமே உத்திரவாதம் அளிப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளது, ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சுகபோகத்தில் மூழ்கி இருப்பீர்கள் எனில் அல்லாஹ்(சுபு) தனது வானவர்களை அனுப்பி கிலா*பாவை நிர்மாணிக்கப் போவதில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மதினாவில் இஸ்லாமிய அரசை நிர்மாணித்ததைப் போல் அவர்களது தோழர்களான ஸஹாபா பெருமக்களும் அவர்களை பின்துயர்ந்து வந்த முஸ்லிம்களும் தொடர்ந்து அதை நிலைநிறுத்தியது போல் இஸ்லாமிய அரசை நிர்மாணிப்பதையும் தொடர்ந்து அதை நிலைநிறுத்துவதையும் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு கடமை ஆக்கியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
முஸ்லிம்களே!
உவகை கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ளும் வாய்ப்பபை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எழுந்து நில்லுங்கள். உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்õ அல்லாஹ்(சுபு) அருட்செய்துள்ள கூட்டத்தினரோடு இணைந்திருப்பதின் மூலமாக அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) நமக்கு அதிகாரத்தையும் வாரிசுரிமையையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். நபித்துவத்தின் அடிச்சுவட்டில் கிலா*பா ஏற்படும் என்று அண்ணலார்(ஸல்) நமக்கு நற்செய்தி கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்களே!
மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்(சுபு) வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ்(சுபு) வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக ... (2 :143)
முஸ்லிம்களே!
நீங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட தூதரும்(ஸல்) அவர்களுடைய தோழர்களும் அவர்களை பின்பற்றி வந்த முஸ்லிம்களும் கடந்து வந்த அடிச்சுவட்டை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா? அவர்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய விதத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? அல்லாஹ்(சுபு) உங்கள் மீது வாஜிபாக ஆக்கிய கடமையை நிறைவேற்றுவதில் நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். அனைத்து மார்க்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் வெற்றி கொண்டே தீரும் என்று அவன்(சுபு) விதித்திருப்பதால் அதன் வெற்றிக்காக உங்களை நீங்களே அர்பணித்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள், (12 : 21)Source: http://www.warmcall .blogspot. com/
வருண் காந்தியை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் கும்பலையே தடை செய்
புதிய ஜனநாயகம் 2009
"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.
உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வருண் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் அத்தொகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ""இது (காங்கிரசின் சின்னமான) கையல்ல இது (பா.ஜ.க.வின் சின்னமான) தாமரையின் சக்தி; இது தேர்தலுக்குப் பிறகு முஸ்லீம்களின் தொண்டையை அறுத்து விடும்'' (ஆதாரம்: தி ஹிந்து, 24.03.2009, பக்.10) எனப் பேசியதோடு, ""சுன்னத்'' செய்வது போன்ற செய்கையையும் காட்டி முஸ்லீம்களை இழிவுபடுத்தியிருக்கிறான். மேலும், ""யாராவது ஒருவர் இந்துக்களை நோக்கி ஒரு விரலை நீட்டினாலும், அந்தக் கையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்'' என்றும் (ஆதாரம்: தி ஹிந்து, 18.03.2009, பக்.1) வருண் காந்தி ஊளையிட்டுள்ளான்.
நேரு குடும்பத்தின் வாரிசான வருண் காந்தி, பார்ப்பதற்கு வெள்ளையும் சொள்ளையுமாகத் தெரிந்தாலும், அவன் வாயைத் திறந்தாலே முஸ்லீம்களுக்கு எதிரான வக்கிரமும், இந்து மதவெறிக் கொழுப்பும்தான் பொங்கி வழியும் எனப் பல பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவனது இந்து மதவெறி பிடித்த பேச்சைப் பத்திரிகையாளர்கள் ஒளி ஒலிப்பதிவு செய்ய முயன்றபோதெல்லாம் இந்து மதவெறிக் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். எனினும், இத்தாக்குதல்களுக்கு அஞ்சாமல் தனியார் தொலைக்காட்சியைச் Nசுர்ந்த நிருபர் ஒருவர், மிகவும் இரகசியமான முறையில் வருண் காந்தியின் பொதுக்கூட்ட பேச்சை ஒளிப்பதிவு செய்து, கவிஞன் என்ற போர்வையில் உலவி வரும் அம்மிருகத்தை இந்திய மக்களின் முன் அம்பலப்படுத்திவிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் வருண் காந்தியின் பொதுக்கூட்ட உரை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் குற்றஞ்சுமத்தி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு வருண் காந்திக்கும் பா.ஜ.க.விற்கும் தாக்கீது அனுப்பியது. ""தனது பொதுக்கூட்ட உரையை யாரோ திருத்தி வெளியிட்டு உள்ளதாகவும், இது தனது எதிரிகளால் பின்னப்பட்ட சதி'' என்றும் விளக்கம் கொடுத்து, வருண் காந்தி தப்பித்துக் கொள்ள முயன்றான். இந்தியத் தேர்தல் ஆணையம் வருண் காந்தியின் பித்தலாட்ட விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதோடு, அவன் மீது மூன்று குற்ற வழக்குகளைத் தொடுத்திருக்கிறது. இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உ.பி. உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டதோடு, இந்தக் குற்ற வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
"வருண் காந்தியை பிலிபிட் தொகுதியின் வேட்பாளராக நிறுத்த வேண்டாம்'' எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதை, பா.ஜ.க. ஒதுக்கித் தள்ளிவிட்டதன் மூலம் அக்கட்சி வருண் காந்திக்குக் கொம்பு சீவிவிட்டுள்ளது. அத்வானி இப்பிரச்சினை பற்றி மௌனம் சாதிப்பதன் மூலம் வருண் காந்திக்கு ஆதரவு காட்டி வருகிறார். ராஜ்நாத் சிங் போன்ற அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையம் எங்களுக்கு எப்படி ஆலோசனை வழங்கலாம் எனக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவசேனை, விஸ்வ இந்து பரிசத் போன்ற வானரக் கூட்டங்களோ வருண் காந்தி பேசியதில் ஒரு தவறும் இல்லை என வம்படி செய்து வருகின்றன.
"வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம்'' எனத் தேர்தல் ஆணையம் வழங்கிய ஆலோசனையை, ஏதோ வருண் காந்தியின் குடியுரிமையையே பறித்து விட்டது போல ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊதிப் பெருக்கி வருகிறது. இப்பிரச்சினையில் இந்து மதவெறி அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் ஆகியோரின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தினமணி தலையங்கமாக (25.03.2009) வடித்துக் கொடுத்துள்ளது.
"வருண் காந்தியின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்படும் முன்பே, அவரை வேட்பாளராக நிறுத்தாதீர்கள் எனத் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறுவது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. .......ஜகதீஷ் டைட்லர் போன்ற சீக்கியர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சர்களாகும்போது, வருண் காந்திக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்குகின்றன ஊடகங்கள்.....'' என தினமணி புலம்பித் தீர்த்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சில முசுலீம்கள் நிரபராதிகள் எனத் தெரிந்திருந்தும், அவர்களுக்குப் பிணை கூட வழங்காமல், விசாரணை என்ற பெயரில் 910 ஆண்டு காலம் அவர்கள் சட்டவிரோதமாகத் தண்டிக்கப்பட்ட பொழுது அக்குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பல முசுலீம்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை காலத்தைவிட அதிகமான ஆண்டுகளைச் சிறையில் கழிக்க நேரிட்ட பொழுதெல்லாம், தினமணிக்கு இப்படிப்பட்ட "நியாய' உணர்ச்சி பொங்கி வழிந்ததில்லை.
"தேர்தலுக்குப் பிறகு முசுலீம்களின் தொண்டைக் குழியை தாமரை அறுக்கும் எனப் பேசிய வருண் காந்திக்கு வேட்பாளராக நிற்கும் தகுதியுண்டா?'' என அறத்தின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்க முடியாத அளவிற்கு தினமணியின் கண்களை இந்துமதவெறி மூடி மறைக்கிறது.
சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்ட காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் டைட்லர் மட்டுமல்ல் பல முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களுக்கும், படுகொலைகளுக்கும் தளகர்த்தாக்களாகச் செயல்பட்ட அத்வானி, நரேந்திர மோடி, கல்யாண் சிங், பால் தாக்கரே உள்ளிட்ட பல இந்து மதவெறிக் கிரிமினல்களும் கூடத்தான் சட்டத்தால் தண்டிக்கப்படாததோடு, அரசின் பாதுகாப்போடு சுற்றி வருகிறார்கள். "அவர்களையும் தேர்தலில் போட்டியிடத் தடை செய்; வருண் காந்தியையும் தடை செய்'' என தினமணி கூறியிருந்தால், அதனின் நடுநிலைமையை மெச்சியிருக்கலாம். ஆனால், தினமணியோ ""நீ மட்டும் யோக்கியமா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம், இந்து மதவெறிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறது.
பா.ஜ.க., "வருண் காந்தியின் பேச்சு கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை'' எனத் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறதாம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறெதுவும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் பிறப்பும் சரி, அவ்வமைப்புகளின் இயக்கமும் சரி, ஆதிக்க சாதிவெறி முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலைத் தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்வானி, நரேந்திர மோடி போன்ற அக்கட்சியின் ""தீவிரவாத''த் தலைவர்கள் மட்டுமல்ல, தவறான கட்சியில் இருக்கும் சரியான நபராக திராவிடக் கட்சிகளால் முன்நிறுத்தப்பட்ட ""மிதவாதி'' வாஜ்பாயியும், முசுலீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்குவதில் சளைத்தவரல்ல.
வருண் காந்தியாவது தனது பேச்சை யாரோ திருத்தி வெளியிட்டிருப்பதாகத் தான் கூறி வருகிறார். ஆனால், வாஜ்பாயியோ புளுகுவதில் எல்லோரையும் மிஞ்சியவர். வாஜ்பாயி பிரதமராக இருந்த பொழுது, குஜராத் கலவரத்தையடுத்து நடந்த பா.ஜ..கட்சியின் கோவா மாநாட்டில் முசுலீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்கினார். அவரது பேச்சு நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளானபொழுது, ""தான் அப்படி பேசவில்லை'' எனப் புளுகியதோடு, தனது பேச்சை தானே திருத்தி ஒரு ஒலித்தகட்டை வெளியிட்டு, நாடாளுமன்றத்தையே ஏமாற்றினார். இப்படிப்பட்ட யோக்கியசிகாமணிகள் நிறைந்த அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.
நியாயமாகப் பார்த்தால், சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலைமை தாங்கி நடத்திய முசுலீம் எதிர்ப்பு கலவரங்கள், படுகொலைகளுக்காக, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்டு அதன் சகோதர அமைப்புகள் அனைத்தையும் அரசியல் அரங்கிலோ, பண்பாட்டு அரங்கிலோ செயல்பட முடியாதவாறு தடை செய்திருக்க வேண்டும். அக்கட்சியின் "தேசிய'த் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் ராம.கோபாலன் வரை, இந்து மதவெறி பாசிசக் கும்பலின் தளபதிகள் பலரின் குடியுரிமைகள் அனைத்தையும் பறித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனையோ வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இந்து மதவெறிக் கும்பலை எதிர்கொள்வதில், "மதச்சார்பற்ற' இந்திய அரசின் சட்டங்களோ மொன்னையாக இருக்கின்றன. அச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் பெற்ற போலீசு நீதிமன்றங்கள் இரண்டும் இந்து மதவெறிக் கும்பலின் இளைய பங்காளிகளாக நடந்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் தொடுத்துள்ள வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தில்லி உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார், வருண்காந்தி. இவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கத் தனக்கு அதிகாரம் உள்ளதா என்பதைக் கூட ஆராயாத தில்லி உயர்நீதி மன்றம், மார்ச் 27 முடிய வருண் காந்திக்குத் தற்காலிகப் பிணை வழங்கி, சுர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதே போன்று ஒரு வழக்கு சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவுக்கு எதிராக நடந்த பொழுது, அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய சிறை தண்டனையைக் கூட அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாறாக, ""பால் தாக்கரே ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப் போடவும் கூடாது'' எனத் தடை விதித்து, எறும்புக் கடியைப் போல ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய அரசின் மதச்சார்பின்மை கிழிந்து கந்தலாகி விட்டது என்பதை குஜராத் முசுலீம் படுகொலையின் பின் உலகமே தெரிந்து கொண்டு விட்டது. இப்படிப்பட்ட நிலையில், வருண் காந்திக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் தொடுத்துள்ள வழக்கு, இந்திய அரசின் நிர்வாணத்தை மறைக்கும் சல்லாத் துணியாகத்தான் பயன்படுமேயொழிய, அதற்கு மேல் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது.
"நேரு குடும்பத்தில் பிறந்த வருண் காந்தி இப்படிப் பேசலாமா?'' என்பது சில அப்பாவிகளின் அங்கலாய்ப்பு. வருண்காந்தியின் "தோப்பனார்'' சஞ்சய் காந்தி, அவசர நிலை காலத்தில் முசுலீம்களுக்கு எதிராகப் போட்ட ஆட்டமெல்லாம், ஆர்.எஸ்.எஸ். கும்பலையே கொஞ்சம் அசர வைத்திருக்கும். தலைநகர் தில்லியின் துருக்மான் கேட் பகுதியிலுள்ள முசுலீம் குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியதில் தொடங்கி முசுலீம் ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்டு, சஞ்சய் காந்தி மீது சுமத்தப்பட்ட பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டன. அப்படிப்பட்ட கிரிமினலின் தப்பாத வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறான், வருண் காந்தி.
குப்பன்
http://www.tamilcircle.net/
Saturday, April 18, 2009
துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!
ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்து பலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.
என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.
இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.
தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் "உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்" என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.
வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.
இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.
டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!
நம்ம ஊருல இரு பழமொழி சொல்லுவாங்க "குதிரை *** காஞ்சா வைக்கோலையும் தின்னும்" அப்படினு அதே மாதிரி இருக்கு.
இந்த நிலைமை இப்போது வந்தது அல்ல குசும்பன். கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள். விசா சார்ஜை ஏற்றினார்கள்.. அது தான் முதலில் ஆரம்பித்தது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வெளி நாடுகளில் இருந்து அங்கு வேலைக்குச் சென்றவர்களுக்கு துன்பம் தர ஆரம்பித்தது துபாய் அரசு. பூகம்பம் வந்த அன்றே முதலீட்டாளர்கள் அரண்டு போய் கிடந்தார்கள். கட்டப்பட்ட கட்டிடங்களை வாங்க நாதியில்லை. இரும்புக்கர ஆட்சியால் செய்திகள் வெளி உலகுக்கு தெரியவில்லை. இன்றைய நாட்களில் வேறு வழியின்றி செய்திகள் கசிய ஆரம்பிக்கின்றன. என் நண்பர் ஒருவரிடம் அவரின் நன்பர் சொன்னது : துபாய் ஏர்போர்ட்டில் எண்ணிலடங்கா கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். காரின் ஓனர்கள் அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டார்களாம்....
இதையும் சேத்துங்க
விடுமுறையில் ஊருக்கு போனவங்கள
திருப்பி கம்பெனி கூப்பிடுற வரையும்
வரவேணாம் சொல்றாங்க,
விசா ரெனிவல் கிடையாது,
வலுகட்டாயாம விடுமுறைக்கு அனுப்புறதும் நடக்குது. இருக்கறவங்களுக்கு சம்பளம் எப்ப கிடைக்கும்னு தெரியாது சரி கிரெடிட் கார்டு வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைச்சிட்டாங்க பர்சேஸ் பண்ணதோட கூட அதிகபட்சம் 500 வைச்சு கிரெடிட் லிமிட் குறைச்சிருக்காங்க
May Almighty ALLAH (Some Says GOD) (SWT) guide all of us to the Right Path and give all of us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all things which are in contradiction to the Holy Qur'an and Sunnah, Aameen.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்
நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.
ஆசாத் அவர்கள்தான் தேசக் கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்துக் கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.
10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.
நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார்.. 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.
1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் பிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.
முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார்.. சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.
ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.
உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.
1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.
1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.
- ஆதாரம்: (www.moulanaazad. blogspot. com)
ராஜகிரி கஸ்ஸாலி
http://www.keetru. com/history/ india/index. php
நட்புடன்
மீரான்
http://www.vaalkaikalvi.